பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரவாமல் தடுக்கும் ஊராட்சிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவாலங்காடு : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு அறிவிக்கும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தும் ஊராட்சிக்கு, என் சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, ஒன்றிய சேர்மன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா விஜயராகவன் கூறியதாவது:பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள. ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும்.அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை ஊராட்சி நிர்வாகம், மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கூறியுள்ளார்.

நமது ஒன்றியத்தில் உள்ள, 42 ஊராட்சிகளில், சுகாதாரம், சுத்தம் மற்றும் கொரோனா வைரஸ் விரட்ட அரசு அறிவித்த செயல்முறைகள் சரியாக செயல்படுத்தும் ஊராட்சிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் தேர்வு செய்து, சிறந்த ஊராட்சிக்கு என் சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன்.காந்தியடிகள் அகிம்சை வழியில் போராடி எதிரிகளை வெளியேற்றினார். அதேபோல். நாம், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்து கொள்ளவும், எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கவும் ஒன்றிணைந்து அரசு கூறும் அறிவுரைகளை ஏற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X