பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து வந்த 157 பேர் தொடர் கண்காணிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த, 157 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள, 229 நபர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில், 57 பேர் சிகிச்சைக்கு பின், அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 157 நபர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், வங்கி, ஏ.டி.எம்., மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளிட்டவைகள் இயங்குவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X