பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை,இளையான்குடியில் இரண்டு மடங்கு விலையேற்றம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

மானாமதுரை:மானாமதுரை,இளையான்குடியில் 144 தடை உத்தரவு எதிரொலியாக காய்கறி,இறைச்சி ஆகியவற்றின் விலை இரண்டு மடங்கு கூடியுள்ளதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.பிரதமர் மோடி நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கை மக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.தமிகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,இருந்தாலும் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள்,மளிகை சாமான்கள்,இறைச்சி,பால் விற்பனை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.மானாமதுரை,இளையான்குடி பகுதியில் காலையில் காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் வருவதால் கடந்த வாரம் 1 கி,ரூ.40 க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.90 க்கும்,கடந்த வாரம் 1கி ரூ.15 க்கு விற்ற தக்காளி ரூ.45 க்கும், அவரை ரூ.120 க்கும் என விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரம் ரூ.60 க்கு விற்ற கோழி இறைச்சி தற்போது ரூ.120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X