பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை நடக்க வைக்கும் போலீஸ்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி : பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிற்க வைத்து, அங்கிருந்து நடக்க வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை சாக்காக கொண்டு, பொதுமக்கள் அடிக்கடி வெளியே வருவது பரவலாக காணப்படுகிறது.அதை தடுக்க, பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதும், கெஞ்சுவதுமாக போலீஸ் உள்ளனர். ஆனால், கும்மிடிப்பூண்டி போலீசார் நுாதன முறையை கையாண்டு வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர். அடிக்கடி மக்கள் வருவதை தடுக்கும் நோக்கில், ரெட்டம்பேடு சந்திப்பு சாலையில் உள்ள மூன்று சாலைகளையும் போலீசார் முடக்கினர்.பொதுமக்கள் தங்கள் வாகனத்தை அந்த சந்திப்பில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்படி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஒரு முறை வெளியே வரும் பொதுமக்கள், நடந்து செல்வதை தவிர்க்க எண்ணி அடுத்த சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இதனால், மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையை, சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X