பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் பள்ளிவாசலில் ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் ஒரு மசூதியில், வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் தங்கியிருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிவாசலில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா மற்றும் சுகாதாரத் துறையினர், நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த, 10 பேர், மலேஷியாவைச் சேர்ந்த, நான்கு பேர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என, 16 இஸ்லாமியர்கள், பல நாட்களாக தங்கியிருப்பது தெரிய வந்தது. மருத்துவர்களின் சோதனையில். அவர்களின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பது தெரிந்தது; எனினும், கண்காணிப்பில் வைத்துள்ளனர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் பொன்னையா, நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:வெளிநாட்டிலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த, 156 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களின் வீடுகளில், சுகாதாரத் துறை மூலம், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனாவால், யாரும் பாதிப்படையவில்லை. வதந்திகளை நம்பாமல், பொதுமக்கள், வீட்டிலிலேயே இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து வந்த 446 பேர் கண்காணிப்பு:

வெளிநாடுகளில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்த, 446 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களின் வீடுகளை, சுகாதாரத் துறை மற்றும் போலீசார், தினமும் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான, அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார். துபாயில் பணியாற்றிய மூவர், சில நாட்களுக்குமுன், சொந்த ஊரான அச்சிறுப்பாக்கம் வந்துள்ளனர்.அந்நபர்களை, அச்சிறுப்பாக்கம் செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி, சுகாதார ஊழியர்களுடன், நேற்று சந்தித்து, கொரோனா வைரஸ் தொற்று குறித்து, பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு தொற்று இல்லையென மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X