பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஏற்படுத்த கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனையை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஓர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஏழு தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில், கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்த, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்யும் வசதி அமைக்கப்படவில்லை.இதனால், அப்பரிசோதனை செய்ய, சென்னை ராஜிவ் அரசு மருத்துமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் செல்வதற்காக, சிறப்பு வசதிகள் உடைய இரு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே, அரசு சார்பில் இயக்கப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X