பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நடவடிக்கையால் மளிகை, சிக்கன் விலை உயர்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : ஊரடங்கு நடவடிக்கையால், காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில், மளிகை பொருட்கள், சிக்கன் விலை உயர்ந்தது.

 ஊரடங்கு உத்தரவால், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்ட நிலையில், சிலர், மது பாட்டில்களை ஏற்கனவே வாங்கி, அவற்றை வீடுகளில் பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை, 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான, மளிகை கடைகள் மட்டும், நகரின் அனைத்து இடங்களிலும் தடைஇல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, பல கடைகளில், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது

 வெளி மாவட்டங்களில் இருந்து, கறிக்கோழி மற்றும் முட்டை ஏற்றி வரும் வாகனங்கள், காஞ்சிபுரத்திற்கு வராததால், சிக்கன் மற்றும் முட்டை வியாபாரிகள், விலையை உயர்த்தியுள்ளனர்.இதனால், சிக்கன் ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்த விலையில், 2.10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, 4 ரூபாய்க்கும், சில்லறை விலையில், 2.50க்கு விற்றது, 4.50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 அத்தியாவசிய தேவைகளுக்காக, நேற்று காலை திறக்கப்பட்ட கடைகள், மாலை, 3:00 மணிக்கு மேல், போலீசாரின் கெடுபிடியால் மூடப்பட்டன.

 உத்திரமேரூர் பஜார் வீதியில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தபோது, திறந்திருந்த பலசரக்கு மளிகை, காய்கறி கடைகள், மருந்தகங்களில், வாடிக்கையாளர்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார்.இதையடுத்து, அந்த கடைகளுக்கு சென்ற கலெக்டர், வாடிக்கையாளர்களை, ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைக்க வேண்டும். அத்தியாவசிய கடைகளில் கூட்டம் சேர்க்கும் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும் என, வியாபாரிகளை எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X