பொது செய்தி

தமிழ்நாடு

400 முக கவசங்களை தயாரித்து இலவசமாக வழங்கப்பட்டது

Added : மார் 26, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், முக கவசம் தட்டுப்பாடு நிலவுவதால், டெய்லர் ஒருவர், 400 முக கவசங்களை தயாரித்து, பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கினார்.

காஞ்சிபுரம் நகரில், மலையாள தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 36; டெய்லர். இவர், காஞ்சிபுரம் விளக்கடிகோவில் தெருவில், தையல் கடை வைத்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முக கவசத்தின் தேவை அதிகமாக உள்ளது.இதனால், டெய்லர் ராஜா, முக கவசம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, முடிவெடுத்தார்.

தன் சொந்த பணத்தில் துணி வாங்கி, இரு நாட்களாக, வீட்டிலேயே, 400 முக கவசங்களை தைத்துள்ளார்.அவற்றை, நேற்று, காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், ரங்கசாமி குளம், விளக்கடிகோவில் தெரு ஆகிய இடங்களில் நின்று, பொதுமக்களுக்கு, இலவசமாகவே வழங்கினார்.முக கவசம் தட்டுப்பாடு நிலவும் நிலையில், ராஜாவின் இந்த செயலை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X