பொது செய்தி

தமிழ்நாடு

நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு பாரம்பரிய முறைகள்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : சாகுபடியில், அதிகளவு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்த்து, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், ஆண்டுமுழுவதும், சுழற்சி முறையில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

பயிர்கள், செடிகளில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகளவு பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் மாநிலங்களில், தமிழகம், 9 சதவீதம் பயன்பாட்டுடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு, பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், உற்பத்தியான பயிர், நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் மாறுகிறது.இதனால், வேதியல் முறைக்கு மாற்றாக, இயற்கை வழியிலான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை பின்பற்ற தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி வருகிறது. இது குறித்து உடுமலை பகுதி விவசாயிகளிடையே, அத்துறை சார்பில், கையேடும் வினியோகிக்கப்படுகிறது.அதில், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பொருளாதார, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் இடர்களை குறைக்கும் வகையில், உயிரியல், பாரம்பரிய, இயற்பியல் மற்றும் ரசாயன கருவிகளை இணைப்பதன் மூலம், பூச்சி மேலாண்மையின் ஒரு நிலையான அணுகுமுறையை ஏற்படுத்துவதாகும்.

பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த, உழவியல், இயந்திரம், மரபு, உயிரியல் மற்றும் ஒழுங்கு நடைமுறைகளை பின்பற்றலாம். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் மூலம், பூச்சிகளை கட்டுப்படுத்துவதாகும்.நாற்றங்காலில், பூச்சிகளை தவிர்க்க, தாவர குப்பைகளை அகற்றுதல், கோடையில் ஆழமாக உழவு செய்தல் உட்பட பணிகள் உள்ளடங்கும். உயிரியல் முறையில், பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.இம்முறையானது, வாழும் உயிரினங்களை பயன்படுத்தி, தேவையற்ற, பூச்சிகளை, கட்டுப்படுத்துவதாகும்.

ஒட்டுண்ணி, கொன்றுண்ணி ஆகியவற்றை பயன்படுத்தி, பெரும்பாலான நோய்த்தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளால், உற்பத்தியாகும் தானியம் நஞ்சில்லாமல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியாவில், 27 பூச்சிக்கொல்லிகள், தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பூச்சிக்கொல்லிகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும்.அதே போல், அலுமினியம் பாஸ்பேட் 13 வகையான பூச்சிக்கொல்லிகள், அரசால், பயன்பாடுகட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மற்றும் மருந்து விற்பனையாளர்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு, விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X