பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு மடத்துக்குளத்தில் முழு ஆதரவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

மடத்துக்குளம் : மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மடத்துக்குளத்தில் பொதுமக்கள் முழு ஆதரவு அளித்து வருவதால், நகரமே வெறிச்சோடியது.கொரோனா வைரஸ் தாக்குதலால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த பாதிப்பை முற்றிலும் அகற்ற, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன.பரபரப்பாக காணப்படும் பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு ஆகிய இடங்கள், சிலர் கூட நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மக்கள் ஊரடங்கு உத்தரவை ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X