சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர் அடங்கினால் நோய் அடங்கும்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

விலகி இருந்தால் துார விலகும், 'கொரோனா'மக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை-நமது நிருபர் குழு-மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மக்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்காமல், சாலைகளில் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிகளவில் சென்று வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் தவிர, 'ஊர் சுற்ற' செல்வதை மக்கள் தவிர்ப்பது அவசியம்.'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

அன்னுார் தாலுகாவில், ஈரோடு மாவட்டத்தின் எல்லையான செல்லப்பம் பாளையத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. ஷிப்ட் முறையில், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர், ஒரு எஸ்.ஐ., நான்கு போலீசார் மற்றும் வருவாய் துறை சார்ந்த ஒரு துணை தாசில்தார், கிராம உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலிருந்து, கோவை நோக்கி வந்த வாகனங்கள், நேற்று இந்த சோதனைச் சாவடியில் ஆய்வு செய்யப்பட்டன. பால், காய்கறி, காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட எல்லையான கஞ்சப்பள்ளி பிரிவில், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில், நீலகிரி மாவட்ட எல்லையான, கோத்தகிரி மற்றும் ஊட்டி சாலையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர். இவ்வழியாக வரும் காய்கறி வாகனங்களை பல்வேறு விசாரணைக்கு பிறகு மட்டுமே போலீசார் அனுமதிக்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் நகரில் பல்வேறு இடங்களில், வலம் வருகின்றனர். அத்தியாவசிய தேவை தவிர்த்து, இதர காரணங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.ஊரடங்கு உத்தரவு என்பது மக்களை கட்டுப்படுத்தும், வெறும் சட்டமல்ல. ஊர் அடங்கினால் தான், கொள்ளை நோயை அடக்க முடியும். மக்கள் குறிப்பிட்ட காலத்துக்கு, சமூக தனிமையை கடைபிடித்தால் மட்டுமே, எதிர்காலம் இனிமையாக இருக்க முடியும் என்ற விழிப்புணர்வு அவசியம்.சோதனைக்கு வந்த, 'சோதனை'அன்னுார் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி செய்யப்படவில்லை.

மாவட்டத்துக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. வாகனங்களில் பயணிப்போருக்கு காய்ச்சல் உள்ளதா என்று பார்ப்பதற்கான, 'தெர்மல் ஸ்கேனர்' வசதி செய்யப்படவில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'விரைவில் தெர்மல் ஸ்கேனர் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது' என்றனர். மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்காமல், உள்ளே அனுமதிப்பது விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அறியாமல் சோதனைச் சாவடிகளில் அனுமதித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X