பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி

Added : மார் 26, 2020
Share
Advertisement

மின்விபத்து அபாயம்உடுமலை, பசுபதி வீதியில் குப்பைகளை மின் இணைப்புகளுக்கு அருகில் வைத்து எரிப்பதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எஸ்.பாரதி, உடுமலை. கொசுத்தொல்லைஉடுமலை, சீனிவாசா வீதியில் சாக்கடை கால்வாயில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதால், கழிவுகள் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

ஆர்.மயில்சாமி,உடுமலை.எரியாத தெருவிளக்குகள்உடுமலை, அனுசம் ரோட்டில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில், அப்பகுதியில் திருட்டு பயம் அதிகரித்துள்ளது.எம்.புவனேஸ்வரி,உடுமலை.கடும் துர்நாற்றம்பொள்ளாச்சி, நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள கோழிக்கடைக்காரர்கள், கழிவுகளை ரோட்டின் ஓரத்திலேயே கொட்டுவதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கிறது.கே.கார்த்திக்,பொள்ளாச்சி.கழிவுநீரால் தொல்லைபொள்ளாச்சி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக அமைக்கப்பட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து, கழிவுநீர் வெளியேறி, ரோட்டில் வழிந்தோடுவதால் சுகாதாரம் பாதிக்கிறது

.ஆர்.கிருஷ்ணன், பொள்ளாச்சி.சுகாதாரம் பாதிப்புஆனைமலை இந்திரா நகர் பகுதியில், ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது. பேரூராட்சியினர் குப்பையை சுத்தம் செய்யாமல் உள்ளனர். குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். வி.மாரிமுத்து, ஆனைமலை. கால்நடைகளால் தொல்லைவால்பாறை நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டில் நடமாடும் கால்நடைகளை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவராஜ்,வால்பாறை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X