பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் பிற மாநில குழந்தைகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிற மாநில குழந்தைகள் பட்டியல் அனுப்ப, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு, மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்தே விடுமுறை அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து சென்றனர். தற்போது, ஏப்., மாதம் வரை முழுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது.வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த, அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது உடுமலை கல்வி மாவட்டத்தில், துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், படிக்கும் பிற மாநில குழந்தைகளின் பெயர் பட்டியல் ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டு தோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பள்ளிசெல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதில், பல்வேறு பணிகளுக்கான குடும்பத்தோடு மற்ற மாநிலங்களிலிருந்து, இடம்பெயர்ந்து இங்கு வந்திருப்போர் பட்டியலும் எடுக்கப்படுகிறது. இந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகள், அந்தந்த பகுதிகளிலுள்ள பள்ளிகளில், கல்வியாண்டின் துவக்கத்தில் சேர்க்கப்படுகின்றனர்.தற்போது, வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிக்கு செல்லும் பிற மாநில குழந்தைகளை கணக்கெடுக்க துவங்கியுள்ளது கல்வித்துறை.

ஆசிரியர்கள் வீடுகளில் இருப்பதால், இஎம்ஐஎஸ் பதிவுகளில் பார்வையிட்டு, தகவல்களை, அந்த மாணவர்களின் போட்டோவுடன், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு 'வாட்ஸ் அப்பில்' அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X