சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோர ஆக்கிரமிப்பால் தவிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

வால்பாறை : வால்பாறை நகரில் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் கடும் அவதித்துள்ளாகின்றனர்.

வால்பாறை நகரம் ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளன. போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டோரத்தின் இருபுறமும் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கடைகளும் அதிக அளவில் உள்ளன.இதனால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ரோட்டில் நடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, அரசு பஸ்களை இயக்க முடியாமல், ஓட்டுனர்களும் அவதிப்படுகின்றனர்.

இதே போல், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் செல்லும் ரோட்டிலும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் இந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.வால்பாறையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது, மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X