பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மாத வாடகை வாங்க மாட்டோம்! வீட்டு உரிமையாளர்கள் சிலர் முடிவு

Added : மார் 26, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஒரு மாத வாடகை வாங்க மாட்டோம்!  வீட்டு உரிமையாளர்கள்  சிலர் முடிவு

சென்னை : கொரோனா காரணமாக, ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், 'ஒரு மாத வாடகை வாங்க மாட்டோம்' என, சமூக வலைதளங்களில், வீட்டு உரிமையாளர்கள் பதிவிடுவது வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகத்தில், 144 தடை போடப்பட்டு உள்ளது. அரசு அறிவித்தபடி, ஏப்., 1ம் தேதி காலை வரை, பொதுமக்கள், வீட்டில் இருக்க வேண்டி உள்ளது.அரசு ஊழியர்கள், சில தனியார் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு, ஊதியத்தில் பிரச்னை இல்லை. தினக்கூலி ஊழியர்கள், குறைந்த மாத ஊதியம் பெறுவோர், சுயமான சிறு தொழில் செய்வோர் அதிகம் பதிக்கப்படுவர். இதில், வாடகை வீட்டில் வசிப்போர், மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில், சில வீட்டு உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். 'இந்த மாத வாடகை வாங்குவதில்லை' என, அவர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இதை பாராட்டியதுடன், 'நானும் அதுபோன்று வாடகை வாங்க மாட்டேன்' என, சிலர் பதில் அளித்துள்ளனர்.இது போன்ற பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202022:23:10 IST Report Abuse
அருண் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம். நமது நாடு எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் , நாம் அனைவருக்குமே மற்றவர்க்கு உதவும் எண்ணம் இருந்தாலும் அவரவர் வீட்டில் தனித்திருக்கும் நிலையில் எப்படி உதவுவது என யோசித்துக்கொண்டு இருக்கும் போது.. தனது மருத்துவமனை தனை கொரோனா ஃபீவர் கிளினிக் ஆக உபயோகித்துக் கொள்ள அளித்திருக்கிறார் டாக்டர் மகேஸ்வரன். எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நண்பரோடு கரம் கோர்க்க என்றும் தயாராய் நாங்கள்..எங்களால் முடிந்தது...1. நமது சுப மருத்துவமனையில் Corona மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படும் பொருத்தமான நபர்களுக்கு உதவிட ரூ 50,000 நிதி உதவி. 2. எங்கள் வீட்டு வேலைகளில் உதவிடும் நபருக்கு கூடுதல் சம்பளத்துடன் விடுமுறை.3. எங்களது வீடுகளில் குடியிருப்போருக்கு இம்மாத வாடகையில் விலக்கு. அவர்களிடம் அந்த பணத்தினை முடிந்தால் இயலாதவர்களுக்கு உதவிடக்கோரி அன்பான வேண்டுகோளுடன். இந்த சங்கிலி தொடரும் என்று நம்புகிறேன்.வீட்டில் இருப்போம், நாட்டைக் காப்போம்.அருண்/திலகா.
Rate this:
Cancel
26-மார்-202019:49:27 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Many home owners specially old age owners depends on the rental income. Not all house owners are rich. Many pay the EMI from the rents, what about them. its depends on the situation of the person.
Rate this:
Cancel
26-மார்-202016:13:20 IST Report Abuse
Ram Pollachi வீட்டு வாடகை தராமல் முன்பணத்தில் கழிக்கும் வாடகைதாரரின் கைங்கர்யம். இப்படிப்பட்ட நல்லவர்கள் இருந்தா கொரோனா போன்ற தொற்றே வராது. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்த குறுக்கு புத்தி கூடவே வருதப்பா!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X