தமிழ்நாடு

'டிரேஸ் கோவிட் - 19' மொபைல் செயலி; சமூக பரவலை தடுக்கலாம் என்கின்றனர் ஐ.டி., ஊழியர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 'டிரேஸ் கோவிட் - 19' மொபைல் செயலி; சமூக பரவலை தடுக்கலாம் என்கின்றனர் ஐ.டி., ஊழியர்கள்

'கொரோனா' வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களை, எளிதில் கண்டறிந்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், 'டிரேஸ் கோவிட்- - 19' என்ற செயலியை, இரு ஐ.டி., ஊழியர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ், உலக நாடுகளை உருக்குலைய செய்துள்ளது. இதன் பாதிப்பு, இந்தியா முழுதும் பரவி உள்ளது. நடவடிக்கைமத்திய, மாநில அரசுகள் இணைந்து, வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகின்றன.இந்த வைரஸ், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வழியாக, இந்தியாவில் பரவி உள்ளது. இங்கு வந்து, சில நாட்களில், வைரஸ் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் எங்கெல்லாம் சென்றாரோ, யார், யாரிடம் பேசினாரோ, அந்த விபரங்களை அவரிடம் சேகரித்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதில், சவால்கள் அதிகம் உள்ளன. வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் பதற்றம் அடைவதால், அவர், யாரிடம் பேசினார், எங்கெல்லாம் சென்றார் என, நேரம் குறிப்பிட்டு விபரங்களை உண்மையுடன் சொல்வது கடினம்.இதை எளிதில் கண்டறிய, சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இரண்டு ஐ.டி., ஊழியர்கள் இணைந்து, 'டிரேஸ் கோவிட்- - 19' என்ற மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து, ஐ.டி., ஊழியர்களான ஜி.சுரேஷ்குமார், 38, சி.ஜார்ஜ்சற்குணராஜ், 38, ஆகியோர் கூறியதாவது: கொரோனா பாதித்த நபரிடம், '10 நாட்கள் எங்கெல்லாம் சென்றீர்கள்; யாரை எல்லாம் சந்தித்தீர்கள்' என கேட்டால், நினைவுக்கு எட்டியதை தான் கூறுவார். பதற்றத்தில், பலவற்றை மறக்கக்கூடும். அவர் கூறியதை வைத்து தான், தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர் சொல்ல மறந்த இடங்களில் இருந்த நபர்களிடம் இருந்து, வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது.

பதிவிறக்கம்:

வைரஸ் பாதிக்கப்பட்ட நபர், எங்கெல்லாம் சென்றார் என்பதை, துல்லியமாக அறிய, 'டிரேஸ் கோவிட்- - 19' செயலியை உருவாக்கி உள்ளோம். வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் சென்ற இடங்களில், 30 அடி சுற்றளவில், யாரெல்லாம் நின்றார்களோ, அவர்கள் விபரங்களை, இந்த செயலி வழியாக அறிய முடியும். இதற்கு, அனைத்து பொதுமக்களும், இந்த செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியை, நாங்களே இணையத்தில் பதிவேற்றம் செய்ய, அனுமதி கிடைக்கவில்லை. தமிழக அரசு பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தால், செயலியை இலவசமாக வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

செயலியின் செயல்பாடு!

'டிரேஸ் கோவிட் - -19' என்ற செயலியை, பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தபின், தங்கள் இருப்பிடம் குறித்து, ஜி.பி.எஸ்., பதிவு செய்ய வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணை பதிவு செய்து, ஓ.டி.பி., பதிவு கொடுத்தால், செயலி செயல்பாட்டிற்கு வரும். மருத்துவமனை நிர்வாகம் மட்டும் கையாள, செயலியில் தனி வசதி உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு, அது குறித்த தகவல் கொடுத்ததும், செயலி தானாக செயல்பட்டு, அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கு, 30 அடி சுற்றளவில் நின்ற நபர்களுக்கும் தகவல் சென்று விடும். அவர்களை, எளிதில் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த முடியும். அந்த நபர்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும் என, ஐ.டி., ஊழியர்கள் கூறினர்.

- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X