சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனித்திருக்காமல் சொந்த ஊர் சென்ற தந்தை, மகன் மீது வழக்கு பதிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோயம்பேடு : தனித்திருக்க சுகாதார துறை அறிவுறுத்தியும், கேட்காமல், ஈராக்கில் இருந்து சென்னை வந்து, சொந்த ஊர் சென்ற தந்தை, மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர், 2வது செக்டார், 1வது தெருவைச் சேர்ந்தவர் சவுபத் சாதிக், 62. இவரது மகன் முகமது அபுபக்கர், 27.இவர்கள், 22ம் தேதி, ஈராக் நாட்டில் இருந்து சென்னை வந்துள்ளனர். கோடம்பாக்கம் மண்டல சுகாதார துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், 28 நாட்களுக்கு, வீட்டில் தனித்திருக்கும் படி அறிவுறுத்தியதுடன், தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், சொந்த ஊரான, சிவகங்கை மாவட்டம் சென்றனர்.இதையடுத்து, சுகாதார துறை அதிகாரி அளித்த புகாரின் படி, தந்தை, மகன் மீது, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X