சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டையர்களின் உடல்கள் 18 மணி நேரத்திற்கு பின் மீட்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஆவடி : ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியான இரட்டை சிறுவர்களின் உடல்கள், 18 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது.

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் மோகன், 45; ஓட்டுனர். இவரது மகன்கள் ஜெஸ்டின், 13, ஜெபஸ்டின், 13; இரட்டைச் சகோதரர்கள். இவர்கள், ஆவடி, முத்தாபுதுப்பேட்டை, கண்டிகையைச் சேர்ந்த கிருஷ்ணா, 13, என்ற நண்பனுடன், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றனர்.அப்போது, கால்வாய்களில் தண்ணீர் வேகமாக சென்றதால், ஜெஸ்டின், ஜெபஸ்டின் ஆகிய இருவரும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணாவை மீட்டனர். ஆழமான பகுதிக்கு சென்ற இரட்டைச் சகோதரர்கள், சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியாகினர்.தகவலறிந்து சென்ற ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், 5 கி.மீ., துாரத்திற்கு மேலாக தண்ணீரில் தேடியும், சிறுவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை.இது குறித்து, பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து, மோரை அருகே கிருஷ்ணா கால்வாயில், சிறுவர்களின் உடல்கள், சேற்றில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டு, நேற்று காலை, 9:00 மணியளவில் மீட்கப்பட்டது.முத்தாபுதுப்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X