சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் மார்க்கெட்டில் காய்கறி கடைகள் மூடல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

தாம்பரம் : ஊரடங்கு உத்தரவையடுத்து, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்த கடைகளை மூட, நகராட்சி மற்றும் போலீசார் உத்தரவிட்டனர்.

நாடு முழுதும், ஏப்., 14 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவ தேவைகளை தவிர, மற்ற காரணங்களுக்காக, பொதுமக்கள் வெளியே வர, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் உள்ள, மார்க்கெட்டில், காய்கறி கடைகள் வழக்கம்போல் இயங்கின.காய்கறிகள் வாங்க, நேற்று மக்கள் கூடினர். சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

இது குறித்து, தாம்பரம் போலீசாருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. மதியம், 12:30 மணியளவில், காய்கறி மார்கெட்டிற்கு சென்ற அதிகாரிகள், கடைகளை மூட உத்தரவிட்டனர்.அதேபோல், நகராட்சி பகுதிகளில், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்கள் கடைகளில் கூட்டம் சேராமல், மக்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, பொருட்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளனர். இதை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X