மாதவரத்தில் தங்க வைக்கப்பட்ட மேற்கு வங்க நபர்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாதவரத்தில் தங்க வைக்கப்பட்ட மேற்கு வங்க நபர்கள்

Added : மார் 26, 2020
Share

மாதவரம் : சுற்றுலா வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள், மாதவரத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த ஆண், பெண் குழந்தைகள் உட்பட, 26 பேர், சில தினங்களுக்கு முன், தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், சென்னை மாதவரத்திற்கு சென்றனர். அங்கிருந்து, ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு செல்ல முயன்றனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல், ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இதனால், அவர்கள், மாதவரம் போலீசாரிடம் உதவி கோரினர்.போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 26 பேரும், மாதவரம், கே.கே.ஆர்., கார்டன் பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X