பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா சென்றோர் நேபாளத்தில் தவிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஆர்.கே.நகர் : சென்னையில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள், நாடு திரும்ப முடியாமல், நேபாளத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

கொருக்குப்பேட்டை, பாரதி நகர் முருகன் கோவில் குருக்கள் வினோத் ஏற்பாட்டில், அதே பகுதியைச் சேர்ந்த, 37 பேர் குழு, 16ம் தேதி சென்னையில் இருந்து நேபாளத்திற்கு, ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். 20ம் தேதி நேபாளம் சென்றடைந்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலாவை பாதியில் முடித்து, 23ம் தேதி, சென்னை வருவதற்காக, நேபாளத்தில் இருந்து கிளம்பி உள்ளனர்.அதற்குள், நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி உள்ளதால், நேபாள அரசு இவர்களை அனுப்பாமல் தடை செய்துள்ளது.இது குறித்து அவர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனால் பயத்தில் உறைந்த உறவினர்கள், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு, நேபாள அரசிடம் பேசி, அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா தொற்று குறைந்தவுடன், அவர்களை சென்னைக்கு அழைத்து வருவதாக உறுதியளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X