பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பு நடவடிக்கை; மாநகராட்சி அலட்சியம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஆவடி: ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், 100 கி.மீ., துாரத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து, ஆவடிக்குச் சென்ற நபர்களின் பட்டியல் நேற்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த நபர்களின் வீடுகளை ஆய்வு செய்து நோய்தொற்று இருப்பின் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இப்பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆடியோவில் அறிவுறுத்தல்அனகாபுத்துார்: அனகாபுத்துார் நகராட்சியில், குப்பை சேகரிக்கும் வாகனங்களில், நாடக நடிகர்கள் மூலம், 20 நிமிடங்கள் ஓடக்கூடிய, 'கொரோனா' விழிப்புணர்வு ஆடியோவை தயார் செய்துள்ளனர்.

அதில், வைரஸ் பரவும் முறை, விழிப்புணர்வுடன் இருக்கும் விதம், தொற்று கண்டறியப்பட்டால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்வதன் அவசியம், வைரஸ் தொற்று இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது, வெளியூர் பயணங்களை தவிர்த்தல், வெளியிடங்களுக்கு சென்று திரும்பிவுடன், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

பாதுகாப்பு பணி தீவிரம்:

பெருங்குடி: ஆலந்துார் மாநகராட்சி மண்டலம் சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. பெருங்குடி மண்டலம் முழுதும், பிரதான சாலைகளில், 10 லாரிகள் மூலமும், தெரு சாலைகளில் ஒரு வார்டில், நான்கு லாரிகள் மூலமும், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, மற்ற கடைகள் திறக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் துாய்மை பணி

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், மாநகராட்சியினர் ஈடுபட்டனர். மண்டலத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள், கிருமி நாசினி தெளிக்கும் பணியில், நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X