சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் கேட்டதால் மருத்துவர் இடமாற்றம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ராயபுரம் : முக கவசம், சானிடைசர் கேட்டதால், ஸ்டான்லி மருத்துவர் சந்திரசேகர், இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராயபுரம், ஸ்டான்லி மருத்துவமனையில், அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் சந்திரசேகர் பணியாற்றி வந்தார். இவர் திடீரென, துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரியில், அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியராக பணியாற்றுவார் என, நேற்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது, அரசு மருத்துவமனைகளில் கொரோனாவிற்காக, சிறப்பு சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி, கடந்த மாதம், சந்திரசேகர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அரசுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து, துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, மருத்துவர் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என, மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X