நெம்மேலி நிலையத்தில் ஏப்., 2 முதல் குடிநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெம்மேலி நிலையத்தில் ஏப்., 2 முதல் குடிநீர்

Added : மார் 26, 2020
Share
சென்னை, : நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, வரும், 2 முதல், குடிநீர் வினியோகம்துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை குடிநீர் வாரியம், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக, கடல்நீரை குடிநீராக்கி, தினமும், 10 கோடி லிட்டர் நீரை, வினியோகித்து வருகிறது. இந்த நிலையத்தில், தானியங்கி வடிகட்டி அலகுகள் பொருத்தும் பணி, தற்போது நடந்து

சென்னை, : நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, வரும், 2 முதல், குடிநீர் வினியோகம்துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலாக, கடல்நீரை குடிநீராக்கி, தினமும், 10 கோடி லிட்டர் நீரை, வினியோகித்து வருகிறது. இந்த நிலையத்தில், தானியங்கி வடிகட்டி அலகுகள் பொருத்தும் பணி, தற்போது நடந்து வருகிறது.இதனால், கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், வழக்கமாக வினியோகிக்கப்படும் குடிநீர், அதே அளவில், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.பராமரிப்பு பணிகள், ஏப்., 1ல் நிறைவு பெறுவதால், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகிக்கும் பணி, அடுத்த நாளான, 2ல் இருந்து துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X