பொது செய்தி

தமிழ்நாடு

வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏ.டி.எம்., கதவை திறந்து வைக்கலாம்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, வங்கி ஏ.டி.எம்., கதவுகளை திறந்து வைக்கலாம் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல், உலக அளவில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. நாட்டில், 500க்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில், 18 பேர் அறிகுறிகள் உறுதியானதை தொடர்ந்து, சிகிச்சை பெறுகின்றனர். உலக நாடுகளை உலுக்கி எடுக்கும், இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரதமர் மோடி, நோய் பரவலை தடுக்கும் விதமாக, சமூக ஒன்று கூடலை கட்டுப்படுத்தும் வகையிலும், நேற்று முன்தினம், நள்ளிரவு, 12 மணி முதல், 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.மக்கள் நலனுக்காக, சில அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்படும். மாநகராட்சி ஊழியர்களால், ஏ.டி.எம்., கதவுகள், மிஷின் பட்டன்கள், அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், நோய் தொற்று பாதிப்பு ஏற்படாது. ஆனால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தற்போது, பணத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே ஆதாரமாக, ஏ.டி.எம்.,கள் செயல்படுவதால், பயன்பாடு அதிகமாகியுள்ளது.அதற்கு தீர்வாக, ஏ.டி.எம்., வாயிற்கதவுகளை திறந்தே வைக்கலாம் என, வாடிக்கையாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.தானியங்கி கதவுகளை, திறக்கவும், மூடவும், கைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.எனவே, வங்கி நிர்வாகங்கள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X