பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : தமிழக அரசின், சுற்றுச்சூழல் விருதுகளுக்கு தனி நபர், கல்வி நிறுவனங்கள் வரும் மே, 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, மேலாண்மை, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும், கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, 2019ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.அதேபோல், சுற்றுச்சூழல் குறித்த சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்கள், சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் உள்ள, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகத்தில், ஏப்.,15க்கு பின் வழங்கப்படுகின்றன.

மேலும், www.environment.tn.gov.in என்ற இணையதளத்திலும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 29ம் தேதிக்குள், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குனர், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை- - 15 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 044 2433 6421 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X