பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பில் வெளி நபர்களுக்கு தடை

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள், வழக்கமாக வரும் வீட்டுப் பணியாளர்களை தவிர, இதர நபர் களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என, குடியிருப்பு காவலர்களுக்கு, அதன் சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

144 உத்தரவு

'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, வரும், ஏப்., 14 வரை வரை, 144 தடை உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.இதன் காரணமாக, சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு, 144 உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வெளிநபர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் வர, தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

அறிவுறுத்தல்

வழக்கமாக வரும், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்றோர், கிருமி நாசினியை பயன்படுத்திய பின் அனுமதிக்கப்படுவர். மேலும், 'ஆன்லைன்' உணவு வினியோகம் செய்யும், 'ஸ்விகி, சொமோட்டோ' போன்ற நிறுவனங்களைச் சேர்ந்தோரை, குடியிருப்பு வாசலில் காத்திருக்கவும், உணவு ஆர்டர் செய்தவர்கள், வெளியில் சென்று அதை வாங்கி வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு வளாகத்திற்குள் வசிப்போரின் நன்மைக்காக, இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X