பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.15 கோடியில்! வீராங்கல் கால்வாய் அடைப்பை தடுக்க ... கால்வாய் மேல் பகுதி மூடும் பணி

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : வேளச்சேரி, வீராங்கல் கால்வாயில் குப்பை சேர்வதை தடுக்கவும், சாலையின் அகலத்தை அதிகரிக்கவும், 15 கோடி ரூபாயில், கால்வாய் மேல் பகுதி மூடும் பணி நடக்கிறது.

வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வேளச்சேரி விரைவு சாலையை ஒட்டி உள்ள, 2 கி.மீ., நீளம், 20 அடி அகலம் கொண்ட, வீராங்கல் கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.வேளச்சேரியில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்கான சாலை விரிவாக்கத்திற்கு, 1 கி.மீ., நீளத்தில் உள்ள, வீராங்கல் கால்வாய் மேல் பகுதி மூடப்பட்டது.கால்வாய் ஒட்டிய பகுதியில், கடைகள் அதிகம் உள்ளன.

பெரும்பாலான கடை உரிமையாளர்கள், குப்பையை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழையின்போது பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால், மீதமுள்ள, 1 கி.மீ., நீள கால்வாய் மேல் பகுதியை மூட, 15 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கியது. இதற்கான பணி நடைபெற்று வருகிறது.கால்வாயின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்திருந்ததால், அதை அகற்றிவிட்டு கான்கிரீட் கலவையால் பலப்படுத்தப்படுகிறது. தரை மற்றும் மேல் பகுதியிலும் கான்கிரீட் கலவையால் கட்டமைக்கப்படுகிறது.

குப்பை சேராத வகையில், ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதியில், கம்பி வலை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், வேளச்சேரி விரைவு சாலையின் அகலமும் அதிகரிக்கும்; கனமழையின்போது, கால்வாயில் தடையின்றி தண்ணீர் செல்லும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X