சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உத்தரவை மீறியவர் மீது வழக்கு பதிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருமங்கலம் : தனித்திருக்க சுகாதார துறை அறிவுறுத்தியும், கேட்காமல் வெளியே சென்றவர் மீது, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சியினர் எடுத்து வருகின்றனர். அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 4,500 பேரை, சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

மேலும், அவர்களது வீட்டிற்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது மட்டுமின்றி, அவர்களது வீட்டில் உள்ளவர்கள் கையிலும் முத்திரை குத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் தடையை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார துறையினரால் தனிமைப்படுத்தப்பட்ட அண்ணாநகர், 12வது பிரதான சாலையைச் சேர்ந்த, லட்சுமணன் அருண் என்பவர், தடையை மீறி வெளியே சென்றுவிட்டார்.அவர் மீது, திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லட்சுமணன் அருண் சமீபத்தில் தான் சீனாவிற்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X