பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

தாம்பரம் : 'ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, சென்னை மாவட்ட காவல் எல்லையில், பெருங்களத்துார் பேரூராட்சி நிர்வாகம், சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

நாடு முழுதும், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், ஏப்., 14ம் தேதி வரை, 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படும் முன்பே, தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை முதல், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன.

போலீசார்

அதன்படி, சென்னை மாவட்ட காவல் எல்லையான, புது பெருங்களத்துார், இரணியம்மன் கோவில் அருகே, ஜி.எஸ்.டி., சாலையின் ஒருபுறத்தில், வண்டலுார் கோட்ட, துணை கண்காணிப்பாளர் தலைமையில், ஓட்டேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.சாலையின் மற்றொரு புறத்தில், பீர்க்கன்காரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும், சென்னைக்கு வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து குறைந்தபாடில்லை.

அச்சம்

இது குறித்து, போலீசார் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாகனங்களில் வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.வேறு வழியின்றி அவர்களை, திரும்ப போகச் சொல்லி, கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். இது ஒருபுறமிருக்க, மாவட்ட எல்லையான இங்கு, எந்த சுகாதார பணிகளும் நடப்பதில்லை.குளோரின் பவுடர் துாவுவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட, துாய்மை பணிகள் எதுவும் நடக்காததால், சக போலீசார் நோய் அச்சத்துடனே பணிபுரிந்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரி கள் கவனித்து, எல்லைப் பகுதியில், துாய்மை பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X