பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா அறிகுறி கண்காணிக்க குழு'

Added : மார் 26, 2020
Share
Advertisement

சென்னை : ''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தி கண்காணிப்படுவோர், வெளியே செல்வதை தடுக்கும் வகையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், வெளிநாடுகளில் இருந்து வந்த, கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும், 4,500க்கும் மேற்பட்டோரின் வீடுகள், அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவர்கள் தங்கியிருக்கும் வீடுகள், தனிமைப்படுத்தப்பட்டு, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு வருகின்றன.மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கைகளில், முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இவர்களில், 1,000 வீடுகளை சேர்ந்தவர்கள், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்துள்ளது.

அவர்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள, 3,500 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வெளியே வரக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வெளியே வருவதை கண்காணிக்கும் வகையில், மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவினர், அவ்வப்போது, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வெளியே வந்தால், சட்டப்படியானநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X