பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட் இரண்டு நாள் விடுமுறை 

Added : மார் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோயம்பேடு : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு, 144 தடை அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், மத்திய அரசு, நாடு முழுவதும், ஏப்., 14 வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் தொடர்ந்து இயங்கும் என, வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும்படி, நாளை மற்றும் நாளை மறுநாள், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இது குறித்து, சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துகுமார் கூறியதாவது:மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், பாதிப்பு இல்லாத வகையில் வினியோகம் ஆன பின்னரே, இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு நோய் பரவாமல் இருக்க, அவர்களிடம் இருந்து மக்களுக்கு பரவாமல் இருக்க, இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆனால், 29ல், வழக்கம் போல மார்க்கெட் இயங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
26-மார்-202016:01:52 IST Report Abuse
R.Kumaresan வைரஸ் கிருமிகள், நோய் பரவுதல், ஊரடங்கு உத்தரவு, 144 தடை, 2 நாள் கோயம்பேடு மார்க்கெட் விடுமுறைன்னுட்டு விடுமுறை அதிகமாக கேட்டு விடுமுறைன்னு சொல்லிட்டா சென்னையில் காய்கறிவினியோகம் அதிகமாக இல்லாமல் போய்விடும்.. R.Kumaresan.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X