பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின் நிலையம் அமையுமா? புழுதிவாக்கம் மக்கள் எதிர்பார்ப்பு!

Added : மார் 26, 2020
Share
Advertisement

உள்ளகரம் : உள்ளகரம்- - புழுதிவாக்கத்தில், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, மின் வாரிய அதிகாரி கள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லுார் துணை மின் நிலையங்கள், 33 கிலோ வோல்ட் திறன் கொண்டது. அங்கிருந்து, உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை குடியிருப்பு பகுதிகளுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.பல நேரங்களில், சீரான மின் வினியோகம் கிடைக்காமல், அடிக்கடி மின்தடை ஏற்படும். உள்ளகரம் பகுதியை மையப்படுத்தி, 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க, 15 ஆண்டுகளாக, மின் வாரியம் முயற்சி செய்து வருகிறது.போதிய இடம் கிடைக்காததால், முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து, சட்டசபை கேள்வி நேரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், புழுதிவாக்கம், ராவணன் நகர் பகுதி, ஏரி அருகே நிலத்தை தேர்வு செய்து, மன்ற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால், நீர்நிலை புறம்போக்கு என்பதால், ஒப்புதல் மறுக்கப்பட்டது.இந்நிலையில், மீண்டும் அந்த இடத்தை, மின்வாரிய அதிகாரிகள், முன்னாள் கவுன்சிலர்கள் சமீபத்தில் பார்வையிட்டு சென்றனர்.மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:உள்ளகரம்- - புழுதிவாக்கம் பகுதியில், 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க, இடம் தேடி வருகிறோம்.முதல் கட்டமாக, 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க, 1.5 கிரவுண்டு இடத்தை, மார்க்கெட் விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உள்ளகரம் - -புழுதிவாக்கம் பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:புழுதிவாக்கம், ராவணன் நகரில், ஏரிக்கரை அருகில் போதிய இடம் உள்ளது. அந்த இடத்தை உயர்த்தி, துணை மின் நிலையம் அமைக்கலாம்.மேலும், புழுதிவாக்கத்தில் பல பூங்காக்கள் உள்ளன. மேலும், சில ஏக்கர் பூங்கா நிலம், தரிசாகவே உள்ளது. மாநகராட்சி முன் வந்து, அந்த இடத்தை ஒதுக்கினால், துணை மின் நிலையம் அமைக்கும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.இது குறித்து, மின்வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X