பொது செய்தி

தமிழ்நாடு

ஆமை வேகத்தில் நடைபாதை அமைக்கும் பணி

Added : மார் 26, 2020
Share
Advertisement

நுங்கம்பாக்கம் : கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், ஆமை வேகத்தில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பாதசாரிகள் பயன்படுத்துவதற்கென அமைக்கப்பட்ட நடைபாதை, மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, பழைய நடைபாதையை அகற்றி, புதிதாக நடைபாதை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.அதன்படி, நடைபாதை அமைக்கும் பணியில், ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பாதசாரிகள் வேறு வழியின்றி விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில், சாலையில் நடந்து செல்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X