பொது செய்தி

தமிழ்நாடு

அவலுார்பேட்டை கமிட்டியில் கூடுதல் கழிவறை தேவை

Added : மார் 26, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

செஞ்சியை அடுத்து பெரிய அளவில் அவலுார்பேட்டையில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு 150க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தினசரி தானியங்களை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.இரவு நேரங்களில் டிராக்டர், வேன் உள்ளிட்டவாகனங்களில் தானியங்களைக் கொண்டு வரும் விவசாயிகள், இரவு அங்கேயே தங்கி விடுகின்றனர்.இங்குள்ள கழிவறைகள், போதுமானதாக இல்லாத நிலையில் கமிட்டி வளாக கட்டடத்தின் பின்புற பகுதியில் திறந்தவெளியை இயற்கை உபாதைகளுக்காக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.தினசரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வரும் இந்த கமிட்டியில் கூடுதலாக கழிவறை கட்டடம் அமைக்க மாவட்ட கமிட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், கொரோனா வைரஸ் கிருமி பரவும் சூழலில், தற்போது பயன்பாட்டில் உள்ள கழிவறைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X