பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு 100 படுக்கையுடன்அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கொரோனா சிகிச்சைக்கு 100 படுக்கையுடன்அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு 100 படுக்கையுடன் கூடிய சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய மூன்று சிறப்பு பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. இதனை, கலெக்டர் கிரண்குராலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, கொரோனா பாதித்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறை குறித்தும், மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கை குறித்தும் மருத்துவ குழுவினர் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, நிலைய மருத்துவர் பழமலை, மருத்துவர்கள் கணேஷ்ராஜா, செந்தில்ராஜா, செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தி, வண்ணமுகில் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வென்ட்டிலேட்டர், ஐ.சி.யூ., பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதலாக படுக்கைகள் அமைப்பதற்கான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X