பயணிகள் நிழற்குடை பாராக மாறிய அவலம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் இரவு நேரங்களில் மது குடிக்கும் பாராக மாற்றியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் புதுச்சேரி - திண்டிவனத்திற்கு இடையே 38 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் 8.143 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை, 5 இடங்களில் சுரங்கப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, ஒவ்வொரு கிராமங்களுக்கும் பஸ்கள் நின்று செல்லும் வகையில், பொது மக்கள் அமரும் வகையில் 2 நிழற்குடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையில் போக்குவரத்து சென்று வருகிறது.தினமும், இந்த சாலையில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் இரவு நேரங்களில் விஷமிகள் மது குடிக்கும் பாராக மாற்றியுள்ளனர்.மேலும், காதலர்கள் அமர்ந்து சில்மிஷங்களில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது. குடி பிரியர்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர்.இதனால் பகல் நேரங்களில் கூட நிழற்குடையில் நிற்பதற்கு பொது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே நெடுஞ்சாலை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X