பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் வெளிநாடு சென்று திரும்பிய 19 பேர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 19 பேர் வீடுகளில் அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டி அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கும் பணி தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருக்கோவிலுார் வட்டாரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய 19 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு தாசில்தார் சிவசங்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டி, வீட்டில் தனித்து இருக்குமாறும், வெளியில் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகசுந்தரம், சரவணன், சங்கரன் மற்றும் போலீசார் உடன்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X