சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகை, காய்கறி கடைகளில் 'நெரிசல்'

Added : மார் 26, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம் : மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததையொட்டி, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வாடிக்கையாளர்கள், கடை உரிமையாளர்களை வருவாய் துறையினர் எச்சரித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப்., 14 வரை, 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையம் பிரிவில் உள்ள காய்கறிக்கடையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கடையில் பணியாளர்களின் எண்ணிக்கையும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.அதிக எண்ணிக்கையில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடை உரிமையாளர்களிடம், 'வாடிக்கையாளர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்பட வேண்டும். எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என எச்சரித்தனர்.வருவாய் ஆய்வாளர் நுார்முகமது கூறுகையில்,''இம்மாதம், 1ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வந்த ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்படுகிறது. மார்ச் 1க்கு பிறகு வெளிநாட்டில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வந்தவர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை வருவாய் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X