பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடியது வால்பாறை

Added : மார் 26, 2020
Share
Advertisement

வால்பாறை : மக்கள் உயிர் காக்க பிரதமர் விடுத்த வேண்டுகோளை எற்று, வால்பாறையில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு அமைதியான முறையில் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வீடு மற்றும் வீதிகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வீடுகளை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பின், உணவு உட்கொள்ள வேண்டும் என்று நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் அடுத்த, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்துள்ளார்.மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை நடைமுறைப்படுத்தும் விதமாக, வால்பாறையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா குறித்து 'மைக்' மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்களும், நேற்று முதல் பணிக்கு செல்லவில்லை. அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர, மற்ற கடைகள் அடைக்கபட்டிருந்தன. எப்போதும் பிஷியாக காணப்படும் வால்பாறை நகரம், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் கூறுகையில், ''நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.ஒரு நாளைக்கு, 20 முறையாவது இரு கைகளையும் சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X