சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் மோதல் 14 பேர் மீது வழக்குப்பதிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் அருளப்பன் மகன் ரைமன், 26; இவர் கடந்த 23ம் தேதி எறையூர் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற அந்தோணியம்மாள் என்பவர் மீது பைக் மோதியது. அப்போது அங்கிருந்த தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ஆசிர்வாதம், குமார், வேலு மற்றும் அவரது தரப்பினர் பைக்கை மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டியதுதானே என கூறினர்.பின்னர், நேற்று முன்தினம் மாலை ரைமன், அவரது ஆதரவாளர்கள் வேலுவை திட்டி தாக்கினர். இதனை அறிந்த ஆசிர்வாதம் தரப்பினர் தட்டிக் கேட்டபோது, அவரையும் தாக்கினர். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், இதுகுறித்து ஆசிர்வாதம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார், ரைமன், மெல்கியு, ஜான்சன், குமார், அலெக்சாண்டர், ஆரோக்கியதாஸ், டேவிட், ஆசீர்வாதம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X