பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் செவிலியர் கல்லுாரியில் கொரோனா விழிப்புணர்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : தமிழ்நாடு செவிலியர் குழுமம் சார்பில் அனைத்து செவிலியர் கல்லுாரிகளும், கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலம், திண்டிவனம், ஒலக்கூர் பகுதிகளில் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலர் டாக்டர் நாராயணசாமி கேசவன், மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், டீன் ராஜப்பன் ஆகியோரின் வழிகாட்டுதல் பேரில், மயிலம் செவிலியர் கல்லாரி சார்பில் முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி, கொரோனா வைரஸ் நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

முதல்கட்டமாக, மயிலம், திண்டிவனம், ஒலக்கூர் பகுதிகளில் 2000க்கும் மேற்பட்டோருக்கு, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கான பிரசுரங்களை விநியோகம் செய்து, கை, கழுவும் முறை, முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து கூறினர்.மயிலம், கீழ்மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை, செண்டூர், திண்டிவனம், ஒலக்கூர் கிராம மக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X