பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு யானை எங்கே?வனத்துறை காத்திருப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம் : காலில் வீக்கத்துடன் உள்ள காட்டு யானைக்கு, சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், சுண்டபட்டி பிரிவு, நெல்லித்துறை காப்புக்காட்டில், 25 வயதுடைய ஆண் யானை, இடது காலில் லேசான வீக்கத்துடன் நடமாடியதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.வனத்துறை கால்நடை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) டாக்டர் மனோகரன் தலைமையில், வனத்துறையினர் யானைக்கு பிடித்தமான உணவு மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் யானையை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். யானையை, நேற்று முன்தினம் கண்டுபிடிக்க மூன்று மணி நேரம் ஆனது.நேற்று இரண்டாவது நாளாக வனத்துறையினர் அரிசி, ராகி, சோளம், பச்சைப்பயிறு ஆகியவற்றை வேகவைத்து, அத்துடன் தேங்காய், கருப்பட்டி ஆகியவற்றை இடித்து உருண்டை பிடித்து, மருந்துகளுடன் வைத்தனர்.

பலாப்பழம் உட்பட பல்வேறு வகை பழங்களுடன் வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் கூறுகையில், ''யானை இருக்கும் பகுதியை தேர்வு செய்து, மருந்துகள் கலந்த உணவுப்பொருள் மற்றும் பழங்களை வைத்துள்ளோம். யானை காலில் வீக்கம் குறைவதற்கான மருந்துகள் உணவு பொருட்களில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X