சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரணமின்றி பைக்கில் திரிந்த 130 பேர் மீது வழக்கு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காரணமின்றி சுற்றி திரிபவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. நேற்று மாலை நகரபகுதியில் வாலிபர்கள் சிலர் பைக்கில் காரணமின்றி சுற்றி திரிந்தனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக சென்ற வாலிபர்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.இந்நிலையில், காரணமின்றி சுற்றி திரிபவர்கள் மீது ஐ.பி.சி., 188, 270, 278, 279 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., ஜெயச்சந்திரன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதைனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இரவு 7:00 மணிக்குள்ளாக 130 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X