சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது 78 பவுன் தங்கம், வாகனங்கள் பறிமுதல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு : நெகமம் மற்றும் பல்வேறு இடங்களில் தங்கநகை திருட்டில் ஈடுப்பட்ட, இரண்டு பேரை போலீசார் கைது செய்தும், 78 பவுன் தங்கநகையை பறிமுதல் செய்தனர்.

நெகமம், பொள்ளாச்சி பகுதிகளில் தங்க நகை பறிப்புகள் நடந்தது. இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க, கோவை எஸ்.பி., சுஜித்குமார் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.போலீசார், பொள்ளாச்சி- - பல்லடம் ரோடு, காட்டம்பட்டி செஞ்சேரி பிரிவில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொள்ளாச்சி நோக்கி இருவர் பைக்கில் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக கூறியதில் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த கிஷோர், 23, தஞ்சாவூர் மாவட்டம், இந்தலூரை சேர்ந்த சிவா என்கிற சிவபிரகாஷ், 23, என்பது தெரியவந்தது.கடந்த மாதம் நெகமம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் நடந்த, தங்க நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 25 லட்சம் ரூபாய் -மதிப்புள்ள, 78 பவுன் தங்க நகைகளையும், டியூக், பல்சர் பைக்குகள், ஒரு கார் மற்றும், 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட இருவரும், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தங்க நகை பறிப்பு மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X