பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக மருத்துவமனைக்கு இடம்: கலக்டர் ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தற்காலிக சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக சிறப்பு மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள டி.எஸ்.எம்., தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி, சின்னசேலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு தொழிற் பயிற்சி மையம் ஆகிய இடங்களை கலெக்டர் கிரண் குராலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நேரு, சின்னசேலம் மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X