பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : ஊரடங்கு உத்தரவால், உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க, ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

உலக அளவில் மக்களை அச்சுறுத்தியும், வேகமாகவும் பரவி வரும் 'கொரோனா' வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த, இந்தியாவில், ஏப்., 14ம்தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, வெளியில் வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. வீடு இல்லாமல், ரோட்டோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, நாள்தோறும் உணவு வழங்க ஏற்பாடு செய்வதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் மொத்தமாக, ஆதரவற்ற நிலையில் இருப்போர் எண்ணிக்கை இதுவரை, 17 ஆக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களுக்கான உணவுத்தேவைகளை, தன்னார்வலர்கள் மூலமும், அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும், வழங்க ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X