பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனம் மூலம் பயிர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் வறட்சியால் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி, மஞ்சள், உளுந்து, வேர்க்கடலை உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழையின் போது நிலத்தடி நீர் மட்டம் வழிவகுத்து கிணற்று நீர் பாசனம் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.

கடும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறையும் போது, கிணறுகளில் நீர் மட்டமும் வெகுவாக குறைகிறது. அந்த தருணத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடுகின்றனர். சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சொட்டு நீர் பாசனம் மூலம் பயிரிடப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி பயிர் செய்வதன் மூலம் நீர் ஆவியாகுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

வேர் பகுதியில் தண்ணீர் சொட்டுவதால் பயிர் ஆரோக்கியமாகவும், களைகள் இன்றி அதிகளவு விளைச்சல் கிடைக்கும். தற்போது நிலவும் வறட்சியால், கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், காரனுார், சிறுவங்கூர், தென்கீரனுார், தச்சூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X