பொது செய்தி

தமிழ்நாடு

அன்னுார் கூட்டுக் குடிநீர் திட்டம் தொட்டி கட்டும் பணி நிறைவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

அன்னுார் : கூட்டு குடிநீர் திட்டத்திற்கான, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகளுக்கு, குடிநீர் சப்ளை செய்யும், 241 கோடி ரூபாய்க்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், 2018ல் தொடங்கி நடந்து வருகிறது. சிறுமுகை அருகே பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு, வரும் வழியில், சுமைதாங்கியில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, அதன்பின், அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த திட்டத்தில், அன்னுார் பேரூராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்ய அன்னுாரில், ஓதிமலை ரோட்டில், சந்தை வளாகத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டும் பணி, ஆறு மாதங்களாக நடந்து வந்தது. இப்பணி இரு நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அன்னுார் பேரூராட்சியில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எட்டு அல்லது ஒன்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போதுள்ள வேடர் காலனி மற்றும் திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டத்தில் தினமும், 15 லட்சம் லிட்டர் நீர் மட்டுமே பேரூராட்சிக்கு வருகிறது.

புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் தினசரி, 30 லட்சம் லிட்டர் நீருக்கு மேல் கிடைக்க உள்ளது. எனவே, இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, அன்னுார் பேரூராட்சியில், மூன்று நாட்களுக்கு, ஒருமுறை, குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்புள்ளது. கூட்டு குடிநீர் திட்ட பணிகள், மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொட்டி கட்டும் பணி முடிவடைந்ததால் பேரூராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X