பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னா கேளுங்க; வேறு வழியில்லை!

Added : மார் 26, 2020
Share
Advertisement

வெளிநாடு, வெளியூர் சென்று வந்தோருக்கு... � தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் அதிகரிக்கும்- நிருபர் குழு -பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக, பல பன்னாட்டு விமான நிலையங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இந்தியா முழுதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவிவருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் மூலம், கொரோனா பரவுகிறது.இதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்டாலே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.நாடு முழுவதிலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் மொத்தம், 32 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கண்டறிய, வருவாய்த்துறையினர் பன்னாட்டு விமான நிலையங்களில் தகவல்கள் சேகரித்து வருகின்றனர்.இதேபோன்று, பொள்ளாச்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஜன., 1ம் தேதியில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியுள்ளவர்களின் பட்டியலை தயாரிக்க அவசர உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன்படி, வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்த நபரின் பெயர், கோவை மாவட்டத்துக்கு வந்த தேதி, எங்கிருந்து வந்தார், தற்போதைய முகவரி மற்றும் தொடர்பு எண், கெரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா, இல்லையா என்ற விபரங்களுடன் பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும். இப்பணியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டுள்ளனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்டமாக, வெளிநாடுகளில் இருந்து கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளுக்குள் வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.குடியிருப்பு பகுதிகளில், அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறையினர் மூலம் வீட்டிலுள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ளவர்கள், வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. வீட்டின் நிலவரம், உள்ளாட்சி அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து, சென்னை, கொச்சி, கோழிக்கோடு உள்பட பல்வேறு, பன்னாட்டு விமான நிலையங்கள் மூலம் இந்தியாவுக்குள் வந்தவர்கள் குறித்த தகவல்கள் சேகரித்துள்ளோம்.இந்த நபர்களில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாவை சேர்ந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, வீடுகளை தனிமைப்படுத்திவருகிறோம். ஓரிரு தினங்களில் இப்பணி முடியும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகள் அனைத்தும் தனிமைபடுத்தப்படும். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை உயரும்.இவ்வாறு, தெரிவித்தனர்.அவசரம் புரியலை!கொரோனா வைரஸ் தொற்று எனும் கொடிய நோய் பரவி வரும் நிலையில், அதைத்தடுக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தீவிர முயற்சி எடுக்கிறது. அதில் ஒன்றாக, இந்த பட்டியல் கேட்கப்படுகிறது. ஆனால், பல அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் குடியிருப்புகளில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், கவனத்துக்கு வந்த தகவல்களை மட்டுமே பட்டியலில் சேர்க்கின்றனர்.இப்படிப்பட்ட சூழலிலும், ஊராட்சி செயலர்கள், ஒன்றிய அதிகாரிகள் அலட்சிய போக்கை மேற்கொள்வதால், ஒட்டுமொத்தமாக அபாயத்தில் வீழும் வாய்ப்புள்ளது. மேலும், ஊராட்சிகளில் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.மக்களே அழைக்கலாம்!வெளிநாடு, வெளியூர் சென்று வந்தவர்கள் விபரங்களை அலுவலர்கள் வந்து விசாரிக்க வேண்டும் என காத்திருக்காமல், பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து தெரிவிக்கலாம். தங்கள் பகுதியில், வெளிநாடு, வெளியூர்களில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் ஊர் திரும்பியவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்த விபரங்களை, அரசு அறிவித்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தகவல் அளிக்கலாம்.ஒன்றிய அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் தகவல் அளித்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும், தாசில்தாருக்கு, 94450 00576 (பொள்ளாச்சி); 94421 45332 (ஆனைமலை) என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X